இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியானது நடைபெற்று முடிந்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் போட்டி நடந்த முடிந்த பின்பு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் நாங்கள் எங்கள் பணியை செய்தோம் பேட்ஸ் மேன் தான் காரணம் என்று குறை கூறுவது அணிக்குள் குழப்பம் நிலவுவதாக எழுந்த கருத்து சர்ச்சை ஆனது. மேலும் அவர் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்து கவாஸ்கர் அரசியல் காரணமாக இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என்று கூறியதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் ரியான் ஹாரிஸ் கவாஸ்கர் கருத்து ஒரு குப்பை என்றும் மற்றும் ஆரோன் பின்ச் கவாஸ்கர் கூறுவதை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது போன்ற வீரர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இதற்கு விளக்கமளித்த அவர் நான் இந்த போட்டியில் மிகவும் ரசித்தேன் மேலும் ஹேசில்வுட் இரண்டாவது போட்டியில் இருந்து நீக்கம் குறித்து மட்டுமே பேசினேன் ஏனென்றால் அவருக்கு முதல் போட்டி முடிந்த பின்னும் எந்த காயமும் ஏற்படவில்லை இதனால் மர்மம் நிலவி வருவதாகவே கூறினேன் என்று விளக்கமளித்துள்ளார்.
தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது.இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா 11 ரன்கள் முன்னிலை வகித்து 191 ரன்களில் 4 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.