cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களை வேட்டையாடிய பும்ரா சிராஜ்.
இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியானது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது முதல் நாள் முடிவில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். இதில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் இணைந்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் நாதன் மேக்ஸ் வீனி இருவரையும் வீழ்த்தினார். முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்,பேட் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இந்த விக்கெட் க்கு பின் நீண்ட நேரம் விக்கெட் இல்லாமல் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடினார் 141 பந்துகளுக்கு 140 ரன்கள் விளாசினார். இவரை முகமது சிராஜ் விக்கெட் எடுத்தார்.
முகமது சிராஜ் டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி,மிட்செல் ஸ்டார்க்,ஸ்காட் போலந்த் ஆகிய 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரவி அஸ்வின் மற்றும் நிதிஷ் ரெட்டி இருவரும் 1 விக்கெட் எடுத்தனர். 337 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தொடர்ந்து களமிறங்க உள்ளது.