cricket: இதுவரை எந்த அணியும் 147 ஆண்டு வரலாற்றில் செய்யாத சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து அணி.
இதுவரை உள்ள 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு ஆணியும் செய்யாத ஒரு பிரமாண்ட மாபெரும் சாதனையை செய்துள்ளது இங்கிலாந்து அணி. தற்போது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 378/5 என்ற நிலையில் உள்ளது. இதில் 378 ரன்கள் எடுத்தால் மிக பெரிய சாதனை ஒன்றை செய்துள்ளது இங்கிலாந்து அணி.
இதுவரை இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 5 லட்சம் ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளது இதில் 717 கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து அணியில் விளையாடியுள்ளார். இன்று நடந்த முடிந்த போட்டிக்கு பின் ரன்கள் 500,126. இங்கிலாந்து அணி இதுவரை 1082 போட்டிகள் மற்றும் 18,954 இன்னிங்ஸில் விளையாடியுள்ளது.
இவர்களை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 429,00 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி 278,751 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி இந்த சாதனையை செய்ய இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் ஆகும். இதன் மூலம் அதிக சதங்கள் அடித்த சாதனையையும் இங்கிலாந்து அணி படைத்துள்ளது.