தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமை தொகையான ரூபாய் 1000 வழங்கப்பட்ட வந்த நிலையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது.
இவற்றில், புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்களில் 1.28 லட்சம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட இருப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான பணியை தமிழக அரசு மீண்டும் தொடங்கியது. 2.80 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததால் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சரியான முறையில் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர்.
குறிப்பாக அரசு சலுகைகளை பெற ஒரே குடும்பத்தில் வசிப்பவர்கள் தனித்தனியாக வசிப்பதாக தவறான சான்றிதழ் மற்றும் தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டுகளை பெறுவதாக புகார் வந்தது. இதனையடுத்து விண்ணப்பங்களை முறையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
இதில், 2லட்சத்து 89ஆயிரத்து 591 பேர் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தவறான தகவல் கொடுத்த சுமார் ஒரு லட்சத்து 28ஆயிரம் 373 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, 1 லட்சத்து 54ஆயிரத்து 500 புதிய ரேஷன் கார்டுகள் வழங்க மின் ஆளுமை முகமை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து உரிய பயணாளிகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.