இன்ஜினியரிங் மாணவர்களின் கவனத்திற்கு!! 2025 ஆம் ஆண்டிற்கான JEE தேர்வு தேதிகள் வெளியீடு!!

0
101
Attention Engineering Students!! JEE Exam Dates 2025 Released!!
Attention Engineering Students!! JEE Exam Dates 2025 Released!!

பொறியியல் படித்த மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் JEE தேர்வு தேதிகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஐ.டி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை படிப்பில் சேர, ஜே.இ.இ தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தேர்வானது இரண்டு கட்டமாக நடைபெறும். அவை முதன்மை தேர்வு மற்றும் பிரதான தேர்வு ஆகும்.

2025 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ பிரதானத் தேர்வு அடுத்த ஆண்டு மே 18 ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு இரண்டு தாள்களாக தலா மூன்று மணி நேரம் நடத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் இரு தேர்வுகளையும் கட்டாயம் எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், இரண்டாம் நாள் மதியம் 2:30 மணி முதல் 5:30 மணி வரை இந்த தேர்வானது நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஜே.இ.இ பிரதான தேர்வை எழுத முடியும். அதேபோல், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 23 ஐ.ஐ.டிகளில் சேர்க்கை இடங்கள் கவுன்சிலிங் மூலம் வழங்கப்படும்.

இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கும் தேதி உள்பட அனைத்து விவரங்களையும் மாணவர்கள் அறிவிப்பில் https://jeeadv.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleதனுஷ், சிவகார்த்திகேயன் இடையேயான உறவு விரிசலுக்கு காரணம் இதுதானா!!
Next articleஇப்படியும் சில ஆண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்!! ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் பரபரப்பு!!