உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சளி,இருமல் இருந்தால் மருத்துவரை அணுகுவதற்கு முன் இந்த பானத்தை தயாரித்து கொடுங்கள்.பருகிய அரை மணி நேரத்தில் முழுமையான சளி,இருமல் தொந்தரவிற்கு நிவாரணம் கிடைக்கும்.
1)வால்மிளகு
2)அதிமதுரம்
3)கருப்பு மிளகு
4)சித்தரத்தை
5)கொத்தமல்லி விதை
6)திப்பிலி
7)சுக்கு
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள பொருள் ஒவ்வொன்றையும் 20 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.ஏழு தினங்களுக்கு பயன்படுத்த இது போதுமானதாக இருக்கும்.
முதலில் அடுப்பில் வாணலி வைத்து சூடாக்க வேண்டும்.பிறகு அதில் வால்மிளகு,அதிமதுரம்,கருப்பு மிளகு,சித்தரத்தை,கொத்தமல்லி விதை,திப்பிலி,தோல் நீக்கிய சுக்கு சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.
கருகிடாமல் பக்குவமாக வறுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.பிறகு வறுத்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக ஆறவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் அடைத்து வைத்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்தலாம்.
சளி,இருமலை போக்கும் சுக்கு மல்லி பானம் தயாரிக்கும் முறை:
முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள சுக்கு கலவை பொடி அரை தேக்கரண்டி அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் சளி,இருமல் ஓடிவிடும்.