கணவன் மனைவியின் தாம்பத்திய உறவு மேம்பட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை வேர்
2)பால்
3)தேன்
பயன்படுத்தும் முறை:
கற்றாழை ஜெல் சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.கற்றாழை ஜூஸ் சர்க்கரை நோய்,இதயம் சம்மந்தபட்ட நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.
அதேபோல் கற்றாழை வேர் பாலியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.கற்றாழை செடியின் வேரை மட்டும் தனியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 முதல் 8 முறை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து ஒரு கப் காய்ச்சாத பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் இட்லி தட்டு வைத்து நறுக்கி வைத்துள்ள கற்றாழை வேரை போட்டு மூடி 10 நிமிடங்களுக்கு குறைவான தீயில் வேக விடவும்.
பிறகு கற்றாழை வேரை வெயிலில் நன்கு காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடர் செய்து கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி வைத்து பயன்படுத்த வேண்டும்.
தினமும் ஒரு கிளாஸ் சூடான பாலில் இந்த கற்றாழை வேர் பவுடர் சேர்த்து கலக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் மிக்ஸ் செய்து பருகி வந்தால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும்.
கற்றாழை வேர் பொடி பாலியல் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய ஒன்று.மலட்டு தன்மை பிரச்சனை உள்ளவர்கள் கற்றாழை வேர் பொடியை தினமும் உட்கொண்டு பயனடையலாம்.