மனிதர்களுக்கு உடல் சுத்தம் மிக மிக முக்கியமான ஒன்று.உடலில் படியும் வியர்வை மற்றும் அழுக்குகளை போக்க தினமும் குளிக்க வேண்டும்.உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ள தினமும் குளிப்பது அவசியமான ஒன்று.
இவ்வாறு குளிக்கும் பொழுது நாம் சில விஷயங்களை செய்யாமல் இருக்க வேண்டியது அவசியம்.அந்தவகையில் நாம் குளிக்கும் பொழுது செய்யக் கூடாத தவறுகள் என்னென்ன என்பது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும்.அடிக்கடி தலைக்கு குளிப்பதால் தலையில் உள்ள இயற்கை எண்ணெய் நீங்கி முடியை வறட்சியாக்கிவிடும்.இதனால் முடி வெடிப்பு.முடி வறட்சி போன்றவை ஏற்படக் கூடும்.
உடலில் உள்ள வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த சோப் பயன்படுத்துகிறது.ஆனால் அந்தரங்க பகுதியில் அதிகளவு சோப் பயன்படுத்தினால் அரிப்பு,எரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
குளிப்பதில் சில முறைகள் இருக்கின்றது.முதலில் காலில் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்தால் உடல் சூடு குறையும்.அடுத்து முழங்கால்,இடுப்பு,மார்பு மற்றும் முகத்தில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
கெமிக்கல் க்ரீமை சருமத்தில் பயன்படுத்தி குளிப்பதை தவிர்க்க வேண்டும்.குளிப்பதற்கு முன்பு ஷேவிங்,வேகக்சிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.இதனால் சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்.எனவே குளித்த பிறகு ஷேவிங்/வேகக்சிங் செய்யுங்கள்.உடற்பயிற்சி செய்த உடனே குளிப்பதை தவிர்க்க வேண்டும்.உணவு உட்கொண்ட உடனே குளிப்பதை தவிர்க்க வேண்டும்.