அடுத்த அதிரடி.. ஒரே மேடையை பகிரப்போகும் விஜய் மற்றும் உதயநிதி!!

0
412
Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!
Next action.. Vijay and Udayanidhi will share the same stage!!

தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் நுழைவதற்கு முன் வரை அதிமுக திமுக பாஜக என மும்முனை போட்டி நிலவி வந்தது. இவர்கள் மேல் வைக்கும் விமர்சனங்கள் மட்டுமே பெருமளவில் பேசப்பட்டு வந்தது. தற்பொழுது இவர்களுடன் விஜய் தனது வெற்றிக் கழக கட்சியுடன் இறங்கியுள்ளதால் தமிழகத்தில் அரசியல் களமானது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படுகிறது.

குறிப்பாக விஜய் மாநாட்டிற்கு பிரவு அவர் எதிரி யார் அவரது அரசியல் கொள்கை என்ன என்பது தெள்ளத்தெளிவாக உள்ளது. இதனால் பல விமர்சனங்களை அவர் சந்திக்க நேரிடுகிறது. யார் இவருடன் கூட்டணியில் இடம் பெற போகிறார், இவரின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்ன என்பது குறித்து பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது.

இவ்வாறு இருக்கும் பொழுது விஜய் அரசியலில் நுழைந்ததும் திருமா, நாம் தமிழருடன் கட்டாயம் விஜய் கூட்டணி வைத்துக்கொள்வார் என்று பலரும் கூறினர். விஜய்-யின் மாநாட்டுக்கு முன் திருமா எங்கள் இனத்திலிருந்து யாராலும் முதல்வராக முடியாது என தெரிவித்திருந்தார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறியது விஜய் மட்டும் தான், அதனால் அவருடன் கூட்டணி வைப்பார் என்று கூறினர். அதற்கேற்றார் போல் திருமாவுடன் ஒரே மேடையில் விஜய் சந்திக்க வாய்ப்பும் அமைந்தது. ஆனால் இருவரின் கூட்டணி குறித்து அரசியல் விமர்சனங்கள் வைக்கப்படும் என்ற காரணத்தினால் அதனை தவிர்த்து விட்டார்.

திருமா நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது குறித்து விஜய் இதற்கு திமுக தான் முக்கிய காரணம் என்று நேரடியாகவே தெரிவித்திருந்தார். எந்த நிகழ்ச்சியில் யாருடன் மேடையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துக் கூட ஓர் கூட்டணி கட்சிக் உரிமை இல்லையா என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த பிரச்சனையே தற்பொழுது வரை முடியாத பொழுது மீண்டும் அடுத்ததாக உதயநிதி மற்றும் விஜய் இருவரும் ஒரே மேடையில் கலந்துக்கொள்ள வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. சென்னையில் புத்தக கண்காட்சியை இம்மாதம் 27 ஆம் தேதி தொடங்கி வைக்க உதயநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதே சமயம் இந்த நிலக்ச்சியில் கலந்துகொள்ளுமாறு தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விஜய் ஊழல் குடும்பம் என திமுக-வை நேரடியாக விமர்சனம் செய்த பொழுது உதயநிதியுடன் எப்படி மேடையை பகிர்வார் என பெரும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Previous articleபேசாம பும்ராவே இருந்திருக்கலாம்..ரோஹித்தின் பின்னடைவு!! ரசிகர்கள் சோகம்!!
Next articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிம்பிள் லுக்!! ஷாக்கான தொகுப்பாளர்!