cricket: இந்திய அணி தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடந்து முடிந்தது இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில் இந்திய அணி இதுவரை கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வியை பெற்றுள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ஓரிரு ஆட்டத்தில் சதம் அடித்தாலும் பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆடமிலக்கிறார். விராட் கோலி ஆப் சைடு வரும் பந்தை அடிக்க முயன்று விக்கெட் விடுவதை பழக்க படுத்தி வருகிறார். ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழக்கிறார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் சரியான பேட்டிங் செய்வதில்லை.இவ்வளவு பிரச்சனைகள் அணியில் இருந்தாலும் கம்பீர் மற்றும் ரோஹித் இதை ஒப்புக் கொள்ளவும் இல்லை அதை சரி செய்யவும் இல்லை என்று அவர் கூறினார்.