இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் முக்கியமானவர் முகமது ஷமி ஆவார். இவர் தற்போது நடைபெற்று வரும் இந்திய ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.
இவர் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பின் 1 வருடமாக எந்த அணியிலும் எந்த போட்டியிலும் விளையாடவில்லை அதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாட தகுதி பெற்ற பின் அவர் ஆஸ்திரேலியா செல்வார் என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா உடனான இரண்டாவது போட்டியில் ஹர்ஷித் ராணா சுமாரான பந்து வீச்சினை வெளிப்படுத்தினார்.
இந்திய ரசிகர்கள் அனைவரும் ஷமி ஏன் அணியில் இடம்பெறவில்லை? அவர் இப்போது ஆஸ்திரேலியா அனுப்பப்படுவர்? என்று கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் தற்போது அவருக்கு டிக்கெட் ரெடி பண்ணுங்க என்று சொல்லும் அளவிற்கு அவர் பவுலிங் மட்டுமல்லாமல் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடி வரும் ஷமி பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் 9 வதாக களமிறங்கிய ஷமி 17 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இதை ரசிகர்கள் ஷமி நன்றாக பந்து வீசி வருகிறார் மேலும் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துவார் அவரை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என கூறி வருகின்றனர்.