ரோஹித் மீண்டு வர இதை செய்ய வேண்டும்!! புஜாரா சொன்ன அட்வைஸ்..களத்தில் எடுபடுமா??

0
101
Rohit needs to do this to recover
Rohit needs to do this to recover

cricket: ரோஹித் பேட்டிங் குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் அவரது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் பல விமர்சனங்கள் எழுந்தது.

குறிப்பாக ரோஹித் கேப்டன்சிதான் காரணம் என அதிகம் பேசப்பட்டது. இதுகுறித்து முன்னாள் வீரர் புஜாரா அட்வைஸ் செய்துள்ளார். அதில் ரோஹித் சர்மா சமீப காலமாக சரியான பேட்டிங் ஃபார்மில் இல்லை அதனால் தான் அவரால் சரியான கேப்டன்சியை செய்ய முடியவில்லை என்று கூறினார்.

மேலும் அவர் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினால் அவர் கேப்டன்சியிலும் சரியாக செயல்படுவார். அதற்கு முதலில் அவர் பேட்டிங் இல் கவனம் செலுத்த வேண்டும் அவர் போட்டியில் 20 முதல் 30 ரன்கள் சேர்த்தால் போதும் அதன் பின் அவர் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்குவார். எனவே அவர் அவருடைய ஃ பார்மை மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா தலைமையில் இதற்கு முன் நடைபெற்ற கடைசி 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் கேப்டனாக பும்ரா செயல்பட்டார் இரண்டாவது போட்டிக்கு ரோஹித் சர்மா அணிக்கு திரும்பி போட்டியில் கேப்டனாக விளையாடினார்

Previous articleஇந்திய ரசிகர்களுக்கு நடந்த சோகம்.. வாழ்வில் மறக்க முடியாத டிசம்பர் 8!! ஒரே நாளில் 3 முறை தோல்வி
Next articleஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!