இந்தியன் ரயில்வே துறையை பொருத்தவரையில் பொதுவாக மக்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்வது வழக்கம். டிக்கெட் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக ஜெனரல் டிக்கெட்டை பெற்றுக் கொள்வர். ஆனால் ஜெனரல் டிக்கெட்டை பொருத்தவரை எவ்வளவு நேரத்திற்குள் ரயிலை சென்றடைய வேண்டும் என்ற கேள்வி இருந்து கொண்டு தான் இருக்கிறது.
டிக்கெட்டுகள் தொடர்பாகவும் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் யாரும் பயணிக்க முடியாது. அவ்வாறு பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால்தான் முன்பதிவு செய்தும், பொது டிக்கெட் எடுத்தும் மக்கள் பயணம் செய்கின்றனர்
இது குறித்த இந்தியன் ரயில்வேயின் விதி :-
✓ 199 கி.மீ. தூரம் வரைக்குமான பயணத்துக்கு, பொது டிக்கெட் வாங்கிய 3 மணி நேரத்திற்குள் ரயிலை பிடிக்கவேண்டியது அவசியம்.
✓ அதேசமயம் பயணம் 200 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஜெனரல் டிக்கெட்டை 3 நாட்களுக்கு முன்பே எடுக்கலாம்.
✓ 199 கிலோமீட்டருக்கும் குறைவானது பயணத்துக்கு முன்பதிவு அல்லாத டிக்கெட் எடுத்துவிட்டு 3 மணி நேரத்திற்குள் பயணம் செய்யவில்லை என்றால், உங்கள் டிக்கெட் ரத்து செய்யப்படும். நீங்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்ய முடியாது.
குறிப்பு :-
3 மணிநேரம் கழித்து உங்கள் டிக்கெட் செல்லாது. முன்பு பலர் தாங்கள் எடுத்த பொது டிக்கெட்டை மற்றவர்களுக்கு விற்று வந்தனர். இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்தவே ரயில்வே இந்த விதியை உருவாக்கியுள்ளது.
உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற நாளில் புக் செய்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ளவும் முடியும். இதனால் டிக்கெட் ரத்து செய்யவேண்டிய அவசியமின்றி டிக்கெட்டின் பயண நேரத்தை மாற்றியமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.