ஐக்கிய அரபு அமீரகத்தின் சுற்றுலா விசாவதிகள் குறித்த புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் துபாய் செல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.
ஐக்கிய அரபு மேரேஜ் பொதுவாக கடுமையான சுற்றுலா விதி கொள்கையை கொண்டிருக்கும், ஆனால் இந்த முறை மேலும் கடினமாக்கி இருக்கிறது. கூடுதல் கட்டுப்பாடுகளுடன் வெளியிடப்பட்ட சுற்றுலா விதி கொள்கை :-
✓ சுற்றுலா பயணிகள் தங்களுடைய ஹோட்டல் முன்பதிவு சான்று, விமான டிக்கெட்டுகள் மற்றும் துபாயில் இருந்து தன் நாட்டிற்கு திரும்புவதற்கான டிக்கெட்டுகள் போன்றவற்றை வளைகுடா நாட்டின் குடியேற்ற துறையின் ஹோட்டலில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தங்களுடைய ஹோட்டல் ரசீதுகள் விமான டிக்கெட் போன்றவற்றை முறையாக சமர்ப்பித்தாலும் தங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அதிலும், தங்களுடைய உறவினர்களின் வீட்டிற்கு செல்ல நினைப்பவர்களுக்கு உறவினர்களின் முழு விவரங்களையும் இணைக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் UAE விதித்திருக்கிறது.
சாதாரணமாக விசா நிராகரிப்பானது 1 – 2 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்பொழுது 5 – 6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 10 விண்ணப்பங்கள் செய்தாலும் கூட அவை அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெடுகள் மற்றும் ஹோட்டல் தங்கும் விவரங்கள் இணைக்கப்பட்டாலும் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், தங்களுடைய உறவினர்களின் வீட்டில் தங்கும் பட்சத்தில் அவர்களுடைய வாடகை ஒப்பந்தம், எமிரேட்ஸ் ஐடி, குடியிருப்பு விசா ஜெராக்ஸ் மற்றும் தொடர்பு விவரங்கள் போன்றவை கட்டாய ஆவணங்களாக இணைக்க வேண்டும் என்ற புதிய விதியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவை அனைத்தையும் சரியாக இணைக்கும் நிலையில் பான் கார்டு விவரங்கள் காரணமாக பலருக்கு விசா பெற முடியாமல் மாட்டிக் கொள்வதாகவும், இதன் மூலம் ஹோட்டல் முன்பதிவிற்கு செய்த செலவு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளுக்கான செலவு என அனைத்தையும் இழக்கும் நிலை ஏற்படுவதாகவும் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே பலரும் துபாய்க்கு விசா விண்ணப்பத்தை தவிர்க்க தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கிறது.