ஆண்,பெண் அனைவரும் உள்ளாடைகளை அணிந்த பிறகே மேலாடையை அணிகின்றனர்.குறிப்பாக பெண்கள் தங்கள் உடைக்கு ஏற்ற உள்ளாடைகளை அணிய வேண்டியது முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது.
உள் உறுப்புக்களை மறைப்பதற்கே உள்ளாடை அணியப்படுகிறது.ஆனால் பலர் மேலாடைகள் வாங்க காட்டும் ஆர்வத்தை உள்ளாடைகள் வாங்க காட்டுவதில்லை.உள்ளாடைகளை கவனமுடன் தேர்வு செய்து வாங்க வேண்டும்.சிலர் நைலான் துணிகளில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை பயன்படுத்துகின்றனர்.
இது மிகவும் தவறான பழக்கமாகும்.பாலிஸ்டர் உள்ளாடைகளை அணிவதால் சரும எரிச்சல்,கொப்பளங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.உடலில் இருந்து வெளியேறும் வியர்வையை பாலிஸ்டர் உரியாது.இதனால் கடுமையான உடல் துர்நாற்றம் வீசக் கூடும்.
சிலர் உள்ளாடையின் நிறம் மங்கும் வரை பயன்படுத்துவார்கள்.ஆனால் நிறம் மங்கிய உள்ளாடைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.உள்ளாடையின் நிறம் மங்குவது அதன் காலாவதியை குறிப்பதாக அர்த்தம்.
உங்களில் பலர் ஓட்டை உள்ள உள்ளாடைகளை அணிந்து கொண்டிருப்பீர்கள்.பல மாதங்கள் உள்ளாடையை பயன்படுத்துவதால் அதில் துவாரங்கள் ஏற்படுகிறது.எனவே துவாரங்கள் உள்ள உள்ளாடைகள் அணிவதை தவிருங்கள்.
தங்கள் உடலுக்கு ஏற்ற சௌகரியத்தை உணர்த்தும் உள்ளாடைகளை தேர்வு செய்து வாங்க வேண்டும்.இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.அடர்த்தி குறைவான உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள்.அடர்த்தி அதிகமான உள்ளாடைகள் சரும பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
உங்கள் உடல் தோற்றத்திற்கு ஏற்ற உள்ளாடைகளை வாங்கி அணியுங்கள்.இதனால் நீங்கள் சௌகாரியமாக உணர்வீர்கள்.அதேபோல் உடைக்கு ஏற்ற உள்ளாடைகளை அணியுங்கள்.ஒரு உள்ளாடை வாங்கினால் அதை 5 முதல் 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.வருடங்கள் கடந்தும் பயன்படுத்தும் உள்ளாடை இருந்தால் அதை உடனடியாக அப்புறத்தப்படுத்திவிடுவது நல்லது.