மார்ச் 31 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான மாநில நிதி தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் வருவாய் குறித்தும் கடன் விவரங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பாக தமிழக போக்குவரத்து துறையின் கடன் ஆனது 3 மடங்கு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2022 – 23 ஆம் ஆண்டு நிதி தணிக்கை அறிக்கை :-
2022-23 ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ( GSDP ) 23, 64, 514 கோடியாக இருக்கிறது. இது , கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி 56 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனிமனித உற்பத்தி அடிப்படையில் ( Per Capita GSDP ) பார்க்கும் போது ரூ. 3,08,020 கோடி என்ற மதிப்பில் உள்ளது. இது தேசிய சராசரி அளவான 1,96,983 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வருவாய் பற்றாக்குறையானது 2021-22 ஆம் ஆண்டை பார்க்கும்பொழுது 2022-23 ஆம் ஆண்டு ரூ. 36, 215 கோடியாக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை குறித்த சிஏஜி அறிக்கை :-
2017 ஆம் ஆண்டிற்கு முன்பு , தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தின் கடன் மதிப்பானது, 6,467 கோடியில் இருந்து, மூன்று மடங்கு அதிகரித்து ரூ. 21, 980 கோடியாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான காரணமாக, ஊழியர்களின் செலவினமானது, 55.20 சதவிகிதம் முதல் 63.5 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், போக்குவரத்து கழக ஊழியர்களை வேறு பணிக்கு அனுப்பியதால் , ரூ.495 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்னணு ஏல செயல்முறைக்கான இலவச இணைய முகப்பை பயன்படுத்தாததால் ரூ. 17.82 கோடி கூடுதல் செலவானதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.