தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!

0
90
Orange alert for 2 days in Tamil Nadu and Puduwai!!
Orange alert for 2 days in Tamil Nadu and Puduwai!!

தற்போது வடகிழக்கு பருவ மழை அனைத்து மாவட்டங்களிலும் மிதன முதல் கனமழை பொய்த்து வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி போய்த கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவடங்களில் மிக கனத்த மழை பொழிந்தது. இதனால் திருவண்ணமலையில் நில சரிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தற்போது இந்திய வானிலை மையம் புதிய தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கில், இலங்கை மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் தாக்கம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில்  இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இந்த மழை 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகிற 11, 12, 13, 16, 17 ஆகிய 5 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக டிசம்பர் 13, 16, 17 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous article3 மடங்காக அதிகரித்த தமிழகத்தின் போக்குவரத்து துறை கடன்!! சிஏஜி அறிக்கை வெளியீடு!!
Next articleஇந்திய அணி கோரிக்கையை ஏற்காத ஆஸ்திரேலியா.. தவிக்கும் வீரர்கள்!! பயிற்சியில் ஏற்படும் சலசலப்பு!!