இந்திய அணி கோரிக்கையை ஏற்காத ஆஸ்திரேலியா.. தவிக்கும் வீரர்கள்!! பயிற்சியில் ஏற்படும் சலசலப்பு!!

0
134
Australia did not accept the Indian team's request
Australia did not accept the Indian team's request
Cricket: இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் இரண்டாவது போட்டியின் தோல்விக்கு பின் வலைப் பயிற்சியின் போது ரசிகர்கள் அனுமதிப்பதில் சலசலப்பு.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அடிலைட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது.
இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் ல் 180 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணி 175 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டிக்கு முன் இந்திய அணி வீரர்கள் பயிற்சியின்போது ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதில் சில ரசிகர்கள் வலை பயிற்சியின் போது வீரர்களை சத்தமிட்டு அழைத்தனர். அவர்கள் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்களை திட்டியும் அவர்களின் பெயரை சொல்லி உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்தும் வந்தனர்.
இதனால் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்வதில் சிக்கலாக இருந்தது. எனவே வலை பயிற்சியின் போது ரசிகர்கள் அனுமதிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தும் அதை ஏற்காமல் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் ரசிகர்கள் வலை பயிற்சியின் போது அனுமதி அளித்து மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளனர். இது என்னதான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் வீரர்களுக்கு இது சிக்கலாகவே பார்க்கப்படுகிறது என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Previous articleதமிழகம் மற்றும் புதுவையில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!!
Next articleரோகித் சர்மா ஒரு கசாப்பு ஆடு.. வெளுத்தெடுத்த இந்திய வீரர்!! மீண்டும் தொடக்க வீரரா??