இந்திய அணி ஆஸ்திரேலியா உடனான சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று (1-1) என்ற நிலையில் உள்ளது.
இந்த நிலையில் மூன்றாவது போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மேலும் இந்த போட்டிக்கு இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்திய அணி வீரர் நிதீஷ் குமார் ரெட்டியால் அணியில் பேலன்ஸ் தடுமாறுகிறது. இரண்டு போட்டிகளில் விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி 163 ரன்களை விளாசியுள்ளார். மேலும் பந்து வீசி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் பேட்டிங் சரிவில் சற்று சிறந்த ஆட்டத்தை அவப்போது வெளிப்படுத்தி வருகிறார்.
மேலும் மஞ்ச்ரேகர் கூறுகையில் நிதிஷ் ரெட்டி ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.ஆனால் அவரை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் ஆன ஒன்று இந்திய அணி பந்துவீச்சினை பலப்படுத்த வேண்டும் என்றும் அவரை நீக்க வேண்டும் என்ற கருத்தும் தற்போது வலைதளங்களில் பெசுபோருளாகியுள்ளது.