cricket: இந்திய அணி தற்போது ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பி செயல்படுகிறதா? என்று விமர்சித்த முகமது கைஃப்.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிவு பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இதனால் மூன்றாவது போட்டி முக்கியமான போட்டியாக பார்க்கபடுகிறது. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெறவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இதில் முகமது கைப் கருத்து தெரிவித்துள்ளார், அதில் அவர் கூறுகையில் இந்திய அணி ஒரே ஒரு வீரரை மட்டும் நம்பி இல்லை. பும்ரா ஒருவர் மட்டுமே அனைத்து ஓவர்களையும் வீச வைக்க முடியாது. இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா சரியாக செயல்படவில்லை. நாம் ஒரு போட்டியில் தான் தோல்வியடைந்துள்ளோம் அதற்கு அனைவரும் பதற்ற பட தேவையில்லை. இன்னும் மூன்று போட்டிகள் உள்ளது.
மீதமிருக்கும் 3 போட்டிகளுக்கு தீவிரமாக புது புது யுக்திகள் உடன் தயாராக வேண்டும். என தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி ஒரு வீரரை மட்டும் சார்ந்திருப்பது இங்குதான் பார்க்கிறேன். தற்போது இந்திய அணியில் அவர் ஒருவர் மட்டும் தான் பவுலர் என்பது போல் அவருக்கும் நீண்ட நேரம் ஓவர் வழங்க முடியாது.என்றும் அவர் கூறியுள்ளார்.