வயிற்றில் புண்,சொத்தைப்பல்,ஈறு வீக்கம் போன்ற காரணங்களால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.இதனால் பிறரிடம் பேச முடியாமல் சிரமமடைய நேரிடுகிறது.
மேலும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது,தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் வாயில் கெட்ட வாடை வீசுகிறது.வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி வாய் புத்துணர்வுடன் இருக்க இந்த டிப்ஸ் பின் பற்றுங்கள்.
வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிகள்:
1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஏலக்காய் – ஒன்று
இந்த இரண்டு பொருட்களை கொரகொரப்பாக அரைத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காயை வெறும் வாயில் மென்று சாப்பிட்டாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
1)புதினா இலை – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஐந்து புதினா இலைகளை போட்டு கொதிக்க சூடாக்கி வாய் கொப்பளித்து வந்தால் துர்நாற்றம் கட்டுப்படும்.
1)கிராம்பு – நான்கு
2)ஏலக்காய் – ஒன்று
மிக்சர் ஜாரில் நான்கு கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து சாப்பிடவும்.இவ்வாறு செய்வதால் வாய் மணக்கும்.
அதேபோல் இந்த பொருட்களை பயன்படுத்தி டீ செய்து பருகி வந்தால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
1)மாதுளை தோல் – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
மாதுளம் பழத்தின் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
இந்த மாதுளை பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து பருகினால் வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.
1)வர கொத்தமல்லி – ஒரு தேக்கரண்டி
2)பட்டை – ஒன்று
மேலே சொல்லப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிளாஸ் அளவு நீரில் கலந்து கொதிக்க வைத்து பருகினால் வாய் துர்நாற்றம் கட்டுக்குள் இருக்கும்.தினமும் இருமுறை பல் துலக்குதல்,நாக்கை சுத்தமாக வைத்தல்,உணவு உட்கொண்ட பிறகு வாய் கொப்பளித்தல் போன்ற செயல்கள் மூலம் வாய் துர்நாற்றம் கட்டுப்படுகிறது.