தமிழகத்தில் தற்பொழுது புதிதாக 1.54 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஏற்படக்கூடிய பெயர் மாற்றம் முகவரி மாற்றம் போன்ற மாற்றங்களை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டையில் உடனடியாக திருத்தம் செய்யக்கூடிய வகையில் அனைத்து முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பு முகம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
இதன் முதற்கட்டம் :-
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடி மக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீரும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 2024 ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வருகிற டிசம்பர் 14 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதில் பெயர் திருத்தம் முகவரி திருத்தம் பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் போன்ற பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதிலும் குறிப்பாக நியாயவிலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பு :-
பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் அல்லது சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதைக் குறித்த புகார்களை முகாமில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்றும் அதற்கான தீர்வு விரைவாக கொடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் வெளியாகியிருக்கிறது.