இனி ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம்!! விண்ணப்பிக்கும் வழிமுறை!!

0
212
Driving license online now!! How to Apply!!
Driving license online now!! How to Apply!!

18 வயது நிரம்பிய வாகன ஓட்டிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் ஆனது தற்பொழுது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பொதுவாக 2 சக்கர ஓட்டுநர் உரிமம், 4 சக்கர ஓட்டுநர் உரிமம் மற்றும் கனரக ஓட்டுனர் உரிமம் என வாகனங்களுக்கு ஏற்றார் போல் ஓட்டுனர் உரிமங்களும் மாறுபட்டு இருக்கின்றன.

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை :-

✓ மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பரிவஹன் சேவா என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘License Related Services’ பகுதிக்குச் சென்று, ‘Drivers/Learners License’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

✓ அங்கு வழங்கப்பட்ட பட்டியலில் இருந்து உங்கள் மாநிலத்தைத் தேர்வுசெய்து, Apply for Driving License ஆப்ஷனைக் கிளிக் செய்து, Continue கொடுக்கவும்.

✓ அடுத்து உங்களைப் பற்றிய விவரங்கள், முகவரி மற்றும் பிற தேவையான தகவல்களை நிரப்பவும்.

✓ இப்போது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 5. அடுத்து அதில் உள்ள டிரைவிங் லைசென்ஸ் டெஸ்ட் ஸ்லாட் தேர்வு செய்யவும். தேதி, நேரத்தை தேர்வு செய்யவும்.

✓ நீங்கள் கொடுத்த தேதியில் ஆர்.டி.ஓ அலுவலகம் சென்று லைசென்ஸ் டெஸ்ட் கொடுத்த பின்ஓட்டுநர் உரிமம் பெறலாம்.

Previous articleஇந்தியன் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அற்புதமான செய்தி!!124 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்!!
Next articleஇந்த கெட்ட பழக்கத்திற்காக இயக்குனர் பாலச்சந்தரிடம் அதிகமாக திட்டு வாங்கினேன்!! வெளிப்படையாக தெரிவித்த ரஜினிகாந்த்!!