cricket: இந்திய அணி அடுத்து நடக்க உள்ள மூன்றாவது போட்டியில் வெற்றி பெற அட்வைஸ் செய்துள்ளார் மேத்திவ் ஹைடன்.
இந்திய அணி அடுத்து நடக்க உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது போட்டிக்கான தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரண்டு போட்டி முடிவடைந்தது.
ஏற்கனவே இரண்டு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் ஒரு ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணி கட்டாயம் மீதம் உள்ள போட்டிகளை வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது.
இந்த மூன்றாவது போட்டியானது பிரிஸ்போன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணிக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.அதில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் 3 மற்றும் 4 வது ஸ்டம்ப் லைனில் பந்து வீச வேண்டும்.
மேலும் முதல் இன்னிங்க்ஸில் முதல் நாளில் ஆல் அவுட் ஆகாமல் பேட்ஸ் மேன்கள் பேட்டிங் செய்ய வேண்டும். இவ்வாறு வீசும்போது விக்கெட் வீழ்த்த அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே இந்திய அணி அதை பின்பற்றலாம் என அறிவுரை கூறியுள்ளார். தற்போது இணையதளங்களில் இது பரவலாக பேசப்பட்டு வருகிறது.