cricket : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் போட்டியில் நவீன் உல் ஹக் வீசிய பந்து வீச்சு ஆட்டத்தை மாற்றியது.
ஜிம்பாப்வே வில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று ஜிம்பாப்வேவில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றது .
இந்த போட்டியில் ரஷித் தலைமையிலான அணியும்,சிக்கந்தர் ராசா தலைமையிலான அணியும் களமிறங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கரீம் ஜனத் 54 ரன்கள் எடுத்தார், முகமது நபி 44 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பிரையன் பென்னட் 49 ரன்கள் விளாசினார். தியான் மியர்ஸ் 32 ரன்கள் எடுத்தார். ஆட்டம் ஆப்கானிஸ்தான் பக்கம் இருந்ததை 15 வது ஓவரை வீச வந்த நவீன் உல் ஹக் இந்த ஓவரில் மட்டும் 6 ஒய்டு பந்துகளை வீசினார். மேலும் இந்த ஓவரில் மட்டும் இவர் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 எடுத்து வெற்றி பெற்றது. இந்த முறை ஐ பி எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் நவீன் உல் ஹக்கை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.