ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் மெகா ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் இதற்கு முன் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் அணியில் உரிமையாளருடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த முறை ஏலத்தில் பங்கேற்றார். ஐ பி எல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
ரிஷப் பண்ட் ரூ.27 கோடி தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வாங்கியது. இரண்டாவதாக ஸ்ரேயர்ஸ் ஐயர் பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு வாங்கியது, மூன்றவதாக வெங்கடேஷ் ஐயரை ரூ.23.75 கோடிக்கு kkr அணி வாங்கியது.இந்த மூன்று வீரர்கள் தான் இந்த முறை ஐ பி எல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்.
இதில் ரிஷப் பண்ட் க்கு என் இவ்வளவு தொகை என்பது குறித்து lsg ஓனர் மனம் திறந்துள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில் இந்த தொகைக்கு பின் எமோசன் மற்றும் திட்டம் தான் இருக்கிறது. ஸ்ரேயர்ஸ் ஐயரை வாங்க டெல்லி அணி போராடியது ஆனால் வாங்க முடியவில்லை. அடுத்து பண்ட்டை வாங்க திட்டமிடும் அதுமட்டுமல்லாமல் பாரத் ஜிண்டால் க்கு கொஞ்சம் பண்ட் மீது பாசம் அதனால் அவர்கள் வாங்க அதிக தொகையை செலவிட முன்வருவார்கள் எனவே அவருக்கு கூடுதல் தொகையை செலவிட்டோம் என கூறியுள்ளார்.