கொசுக்கள் மூலம் பரவும் நோய் பாதிப்பு டெங்கு.இது பெரும்பாலும் மழைக்காலங்ககளில் தான் உருவாகிறது.உலகில் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சிகளால் பாதிக்கப்படுகின்றனர்.டெங்கு பாதித்தவரை கடிக்கும் கொசு மற்றவர்களை கடிப்பதால் இந்நோய் பரவுகிறது.ஏடிஎஸ் என்ற கொசுக்கள் பரப்பும் நோயாக டெங்கு உள்ளது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
1)மூட்டு வலி
2)தலைவலி
3)குமட்டல்
4)தசை வலி
5)தோல் தடிப்பு
6)கண்களை சுற்றி வலி
7)இரத்த வாந்தி
8)கடுமையான வயிற்றுவலி
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை நாடி உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.கொஞ்சம் அலட்சியம் கொண்டாலும் உயர் போய்விடும்.
அதேபோல் வீட்டில் இருந்தபடி டெங்கு காய்ச்சலை இயற்கை வைத்தியம் எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம்.
வேப்பிலை நீர்
கால் கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் டெங்கு பாதிப்பு குறையும்.
பப்பாளி இலை சாறு
டெங்கு பாதிப்பை குணமாக்கும் ஆற்றல் பப்பாளி இலையில் உள்ளது.ஒரு பப்பாளி இலையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் டெங்கு பாதிப்பு குணமாகும்.
நிலவேம்பு கஷாயம்
நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் நிலவேம்பு சூரணத்தை வாங்கி வரவும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி நிலவேம்பு சூரணம் சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் டெங்கு காய்ச்சல் குணமாகும்.