இன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் பெரும்பாலான உணவுகள் ஆரோக்கியமற்றவையாக உள்ளது.மைதா போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளையே அனைவரும் விரும்பி உண்கின்றனர்.
இதனால் உணவுக்குழாய் கடுமையாக பாதிக்கப்படுகிறது.உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் தாமதம் ஏற்படுவதால் மலச்சிக்கல்,வயிறு வலி,வயிறு உப்பசம்,வாயுக் கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகிறது.எனவே செரிமான சக்தியை அதிகரிக்கும் மூலிகை உருண்டையை தயார் செய்து சாப்பிடுங்கள்.
Tips 01
தேவையான பொருட்கள்:
1)பெரிய நெல்லிக்காய் – ஐந்து
2)பன்னீர் ரோஜா இதழ் – ஒரு தேக்கரண்டி
3)குங்குமப்பூ – சிறிதளவு
4)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
5)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
*முதலில் ஒரு பன்னீர் ரோஜா பூவின் இதழை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு ஐந்து என்ற எண்ணிக்கையில் பெரிய நெல்லிகாய் எடுத்து அதன் சதை பற்றை மட்டும் கட் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு மிக்சர் ஜாரில் பெரிய நெல்லி துண்டு மற்றும் காய வைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.
*அடுத்ததாக சிறிது குங்குமப்பூ மற்றும் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை பிழிந்துவிட்டு மைய அரைத்துக் கொள்ளுங்கள்.
*இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
Tips 02
தேவையான பொருட்கள்:
1)சுக்கு – ஒரு துண்டு
2)வெல்லம் – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
*மிக்சர் ஜாரில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு அதில் சேர்க்கவும்.
*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.இஞ்சி தேநீர் செய்து பருகி வந்தாலும் செரிமானப் பிரச்சனை சரியாகும்.