பிரசவித்த பெண்கள் எத்தனை நாட்கள் கழித்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் தெரியுமா?

0
54
Do you know how many days after giving birth women should start exercising?
Do you know how many days after giving birth women should start exercising?

பெண்களின் கர்ப்ப கலாம் மிகந்த மகிழ்ச்சியானதாக இருக்கிறது.உடல் மற்றும் மனதளவில் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க பல்வேறு விஷயங்களை செய்கின்றனர்.ஆனால் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை.

குழந்தையை பராமரிக்க அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளதால் தாய்மார்களால் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த முடியாமல் போகிறது.இதனால் உடல் பருத்து ஆள் அடையாமல் தெரியாத அளவிற்கு சிலர் மாறிவிடுகின்றனர்.

சிலர் பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.சுகப் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் மாற்றம் உண்டாகிறது.

நீங்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் தங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.சுக பிரசவத்த பெண்கள் 2 மாதங்களுக்கு பிறகு எளிமையான உடற்பயிற்சி செய்யலாம்.ஸ்கிப்பிங்,ஜாகிங் போன்றவற்றை 6 மாத காலங்களுக்கு தவிர்ப்பது நல்லது.

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் 6 மாதங்களுக்கு பிறகு எளிய உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.பிரசவத்திற்கு பிறகு தங்கள் உடற்பயிற்சி நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது.பிரசவத்திற்கு பிறகு கனமான பொருட்களை தூக்கி உடற்பயிற்சி செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.சிலர் பளுதூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்கின்றனர்.இதை தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எளிய உடற்பயிற்சியுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

Previous articleகார்த்திகை தீபத்தில் பழைய பூஜை பொருட்களை புதியதாக்க இந்த தூள் உப்பை இப்படி யூஸ் பண்ணுங்க!!
Next articleவீட்டு சுவற்றை கரையான் அரித்து விட்டதா? இந்த பொருளை சுவரில் பூசினால் இனி வராது!!