மத்திய அரசின் EPFO 3.0 திட்டம்!! இனி PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம்!!

0
108
Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!
Central Government's EPFO ​​3.0 Scheme!! With this you can withdraw PF money through ATM!!

2025 ஜனவரி 1 முதல் மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் பணத்தை Atm மூலமே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு காலம் குறித்து பிஎப் பணமானது பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும் அதனுடன் அந்த நிறுவனங்களும் அவர்களின் பெயரில் சிறிது தொகையை இதில் டெபாசிட் செய்கின்றன.

தற்போது வரையில் இந்த பணத்தினை பெறுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து 15 முதல் 25 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக மிகவும் எளிமையாக்கப்பட்ட முறையில் 2025 ஆம் ஆண்டு முதல் ATM மெஷின் மூலம் பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா கூறியிருப்பதாவது :-

இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுக்க விண்ணப்பம் செய்வோரின் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்து பணம் வழங்கி வருகிறோம். இந்த நடைமுறையை இன்னும் எளிமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இபிஃஎப்ஓவில் இருந்து பணம் எடுக்க விரும்புவோர் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுத்து கொள்ள முடியும்.

இதற்கான தொழில்நுட்ப வசதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு 2 அல்லது 3 மாதங்களுக்கும் ஒருமுறை இந்த நடைமுறையில் அடுத்தக்கட்ட முன்னேற்றங்களை நீங்கள் அறிவீர்கள். நிச்சயம் 2025 ஜனவரி மாதத்துக்குள் மிகப்பெரிய மாற்றம் என்பது இருக்கும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறைக்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது” என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Previous articleஇனி வீட்டிலிருந்தே ரூ.50 செலவில் QR பான் கார்டு பெற்றுக் கொள்ளலாம்!! எளிமையான வழிமுறை!!
Next articleடிசம்பர் 18 முதல் விற்பனைக்கு வரும் ஆவினின் புதிய வகை பால்!! அப்படி என்ன இருக்கு!!