பிரபல இயக்குனர் “விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள ‘சீகல்ஸ்’ என்னும் ஹோட்டலை விலைக்கு வருவதாக எண்ணி அதை வாங்குவதற்காக புதுச்சேரி புறப்பட்டு சென்றார்”. இதன் சம்மந்தமாக அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ‘லட்சுமி நாராயணனை’ சந்தித்து பேசினார்.
“புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ‘சீகல்ஸ்’ ஹோட்டலை விலைக்குத் தருமாறு அவர் கேட்க, சுற்றுலாத் துறை அமைச்சருக்கும் என்னவென்று புரியாமல் இருந்தார். பின்பு சுதாரித்த அவர், அது அரசுக்கு சொந்தமான இடம். அதை விற்கவோ, ஒத்திக்கோ விட இயலாது என எடுத்துரைத்தார்”.
அதன்பின் தான் “இயக்குனருக்கு, இடைத்தரகர்கள் தவறான செய்தியை பரப்பி உள்ளது புரிய வந்தது”. அமைச்சரிடம், நிலைமையை எடுத்து கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, “புதுச்சேரியில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இடம் தேவைப்படுவதாக தெரிவித்தார்”. இதற்கு அமைச்சர், ‘புதுச்சேரியில் உள்ள துறைமுகத்தில் ஒரு பொழுதுபோக்கு மையம் இருப்பதாகவும், அதே போல் பழைய துறைமுகத்திலும் பொழுதுபோக்கு மையம் உள்ளது’ எனவும் கூறியுள்ளார்.
விக்னேஷ் சிவனும் அப்பொழுதுபோக்கு மையத்தை பார்வையிட்டு சென்றுள்ளார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேட்டபோது, “விக்னேஷ் சிவன் அரசு ஹோட்டலை விலை பேச வந்தது உண்மைதான். மேலும் இது குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.