இன்றைய மோசமான வாழ்க்கை முறையில் தலைமுடி உதிர்வு சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது.இதை சரி செய்ய வீட்டிலேயே எண்ணெய் தயாரித்து பயன்படுத்துங்கள்.மூலிகை எண்ணெய் பயன்படுத்துவதால் முடி உதிர்வு நின்று அடர்ந்த கருமையான முடி வளரும்.
நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
1)பெரிய நெல்லிக்காய் துண்டுகள் – கால் கப்
2)தேங்காய் எண்ணெய் – 150 மில்லி அளவு
செய்முறை விளக்கம்:
முதலில் 10 பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 150 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அரைத்த பெரிய நெல்லிக்காய் விழுதை அதில் போட்டு மிதமான தீயில் காய்ச்சி எடுக்கவும்.
இந்த பெரு நெல்லிக்காய் எண்ணெயை ஆறவிட்டு கிண்ணத்திற்கு வடித்து சேமிக்க வேண்டும்.இந்த பெரு நெல்லி எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் பிரச்சனையே இனி இருக்காது.
கற்றாழை எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
1)கற்றாழை துண்டுகள் – பத்து
2)தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கற்றாழை மடலை 10 துண்டுகளாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு காட்டன் துணியில் போட்டு துடைத்து எடுக்கவும்.அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.அடுத்து அதில் கற்றாழை துண்டுகளை போட்டு பக்குவமாக எண்ணெய் காய்ச்சி எடுக்கவும்.
இந்த எண்ணெயை ஒரு ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.இதை தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.