தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். கட்சி சார்ந்த முக்கிய விஷயங்கள் முதல் பொதுக்கூட்டங்கள் வரை அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்கி இருக்கின்றனர்.
இது குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள், அணித் தலைவர்களின் கவனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி இனி வரும் காலங்களில் தங்கள் மாவட்டத்தில் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்கள் பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி குறிப்பு உள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் :-
✓ முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
✓ கொள்கை பாடல்
✓ உறுதிமொழி
✓ அதனைத் தொடர்ந்து தாங்கள் திட்டமிட்ட நிகழ்ச்சிகள்
✓ நிகழ்ச்சி நிறைவில் கழக கொடிப் பாடல்
இந்த வரிசையில் அடிப்படையில் தான் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் என கட்சி சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் நடைபெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தங்கள் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் ஆலோசனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ஆகியவை கட்சி தலைமையிடம் அனுமதி பெற்ற பின்பே நடத்த வேண்டும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.