பனிப்பொழிவு உள்ள மாதங்களில் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பலவித பாதிப்புகள் உண்டாகிறது.இதில் சளித் தொல்லையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் சரி செய்துவிடலாம்.
சளி அறிகுறிகள்:
*தும்மல்
*இருமல்
*உடல் வலி
*தலைவலி
*காய்ச்சல்
*மூச்சு விடுவதில் சிரமம்
தேவையான பொருட்கள்:-
1)வெற்றிலை – ஒன்று
2)கற்பூரவல்லி தழை – இரண்டு
3)கரு மிளகு – நான்கு
4)இஞ்சி – ஒரு பின்ச்
5)தேன் – ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
அடுத்து இரண்டு கற்பூரவல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பின்னர் ஒரு பின்ச் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் நறுக்கிய வெற்றிலை மற்றும் கற்பூரவல்லி இலையை போட்டு ஒரு சுத்துவிடவும்.பின்னர் அதில் நான்கு மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு இடித்து வைத்துள்ள வெற்றிலை கலவையை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு இடித்த இஞ்சி சாறை அதில் சேர்த்து 100 மில்லியாக வரும் வரை கொதிக்க விடுங்கள்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரைந்து வந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
1)கெட்டி பால் – ஒரு கிளாஸ்
2)சமையல் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
3)சுக்கு – ஒரு பின்ச்
4)தேன் – ஒரு ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் கெட்டி பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள்.பிறகு ஒரு பின்ச் சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து கொதிக்கும் பாலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் 1/4 ஸ்பூனிற்கும் குறைவான மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகினால் நுரையீரல் சளி நீங்கும்.