இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது.
இதனால் இந்திய அணி மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நியூசிலாந்து உடனான தோல்விக்கு பின் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில் மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், கில் 1 ரன்னிலும், விராட் கோலி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் 47 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்கள் எடுத்து போராடி வருகிறார். தற்போது இந்திய அணி 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.