மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் இவர் பிரபல தபேலா இசை கலைஞர் ஆவார். ஜாகிர் உசேன் அவர் உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார். ஜாகிர் உசேன் தனது தந்தை பின்பற்றி சிறுவயது முதல் பல இசை நிகழச்சிகள் நடத்தி வந்தார். ஜாகிர் உசேன் தால் உட்பட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் அவரது பங்களிப்பை செலுத்தியுள்ளர்.
ஜாகிர் உசேன் இசை சேவைக்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமி விருதை 4 முறை வென்றவர் ஆவார். அவர் தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜாகிர் உசேன் கடந்த வாரம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டார். அவருக்கு தீவர சிகிச்சை பிரிவில் அனுமதிக்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு இருதய நோய் பிரச்சனை இருந்ததால் ஐசியு-வில் அனுமதிகப்பட்டார்.
மேலும் இந்த நிலையில் அவர் இறந்தவிட்டார் என பல ஊடகம் மற்றும் சமூகவளைதலத்தில் பரவி வந்தது. அதனை அவரது குடும்பத்தினர் மறுத்து அவர் நலமுடன் இருக்கிறார் என தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தற்போது உயிர் பிரிந்தது விட்டத்து என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவல் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.