ஆஸ்திரேலியா அணியில் சுற்றுப்பயணம் கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் தற்போது மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.
இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த மூன்றாவது போட்டியில் உச்சத்தில் உள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசம் ஆகும்.
இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடியது. முதல் இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்தார்,மித் 101 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதல் இன்னிங்ஸில் மட்டும் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா அணி வீரர்களான உஸ்மான் கவாஜா,நதன் மேக்ச்வீனி, ஸ்டீவ் ஸ்மித்,டிராவிஸ் ஹெட்,மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் என மொத்தமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸில் முடிவுக்கு வந்தது. இதை ரசிகர்கள் பலரும் இவர் இல்லையென்றால் ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தி இருக்க முடியாது என கூறி வருகின்றனர்.