IMDB (இணையத் திரைப்பட தரவுத்தளம்) இந்த இணையத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட ஸ்டுடியோக்கள், திரையில் வரவுகள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலான தகவல்கள் IMDB பயனர்களிடமிருந்தே வருகின்றன. அதன்படி இந்த 2024-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரைப்படங்களின் டாப் 10 லிஸ்ட் வெளியிட்டுள்ளது.
முதல் திரைப்படம் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம்.
இரண்டாவது திரைப்படம் ஷ்ராதா கபூர், ராஜ்குமார் ராவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த ஸ்ரீ 2 படம்மாகும்.
மூன்றாவது திரைப்படம் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த மகாராஜா திரைப்படம்.
நான்காவது திரைப்படம் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடித்த சைத்தான் திரைப்படம்.
ஐந்தாவது திரைப்படம் ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ஃபைட்டர் திரைப்படமாகும்.
ஆறாவது இடத்தில் இருப்பது சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம்மாகும்.
எழாவது இடத்தில் பூல் புல்லய்யா பிடித்துள்ளது.
எட்டாவது இடத்தில் இந்தி மொழியில் ராகவ் ஜுயல் நடிப்பில் வெளியான கில் திரைப்படம்.
ஒன்பதாவது இடத்தில் சிங்கம் அகேயின் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
பத்தாவது இடத்தில் கிரன் ராவ் நடித்த லாபடா லேடீஸ் திரைப்படம் ஆகும்.
இந்த நிலையில் இந்த 10 இடங்களில் 1 தெலுங்கு திரைப்படம், 7 இந்தி திரைப்படம், 1 மலையாளம் திரைப்படம், 1 தமிழ் திறப்படம் என இடம் பெற்றுள்ளது.