ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!

0
84

பள்ளிக்கல்வித்துறை வெளியேற்றுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்த விருப்பதாகவும் இதழ் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் பரிசு தொகை என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த போட்டியானது மூன்று நிலைகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

முதல் நிலை போட்டி விவரம் :-

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்நிலை போட்டி அந்தந்த மாவட்டங்களில் வருகிற 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

இரண்டாம் நிலை போட்டி விவரம் :-

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 3 குழுக்கள் இரண்டாம் நிலை போட்டியில் பங்கு பெறுவர். இதில் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த நிலைக்கு அதாவது இறுதி நிலைக்கு செல்ல முடியும்.

 

இறுதி நிலை போட்டி விவரம் :-

 

இறுதிப்போட்டி விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 28ஆம் தேதி நடைபெறும். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையில் பரிசு கிடைக்கும்

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இது போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்ததாக பள்ளி கல்வித்துறை தெரி

வித்திருக்கிறது.

Previous articleகுரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு!!கட்டணம் செலுத்த நாளையே கடைசி நாள்!!
Next articleஆவின் பால் பாக்கெட்டுகளில் இனி பிளாஸ்டிக் இருக்க கூடாது!! தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்!!