cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர் போட்டியின் நடுவே காயம் காரணமாக வெளியேறினார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் போட்டி 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது.
இந்திய அணி இந்த தொடரில் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் 167 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 6 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் அவர் பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் பாதியில் வெளியேறினார். மேலும் இந்த போட்டியில் இனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி வருகிறது.
எனவே மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் இரு வேகப்பந்து வீச்சாளர் மட்டும் பந்து வீசும் நிலையில் உள்ளது ஆஸ்திரேலியா. இதனால் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் அதிக ஓவர்கள் வீசுவார் இந்த பிட்சில் சுழற்பந்தினை எதிர்கொள்வது எளிது என்பதால் இந்திய அணி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.