cricket: இந்திய அணியின் முக்கிய வீரர் கே எல் ராகுல் தனி ஆளாக களத்தில் போராடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா உடனான 3 டெஸ்ட் போட்டியில் கப்பா மைதானத்தில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. ஜடேஜா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி களத்தில் உள்ளனர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு செல்ல இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
மேலும் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்த நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் முக்கிய வீரர்கள் ஜெய்ஸ்வால், கில், விராட் கோலி, ரோஹித் சர்மா,பண்ட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் இது இந்திய அணி ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய நட்சத்திர வீரர் கே எல் ராகுல் ஆட்டமிழக்காமல் தனி ஆளாக களத்தில் போராடினார். இவர் நியூசிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்று அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனால் இந்த போட்டியில் அவரின் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.