cricket: இந்திய அணியின் முக்கிய வீரர்களான கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா இந்திய அணியின் மானத்தை காத்ததாக ரசிகர்கள் உருக்கம்.
இந்திய அணி விளையாடி வரும் போட்டியில் இந்திய அணி முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தொடக்க வீரர் கே எல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்திய அணிக்கு ரன்கள் சேர்த்தனர். தற்போது மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது.
மூன்றாவது போட்டி கப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது இதி டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
தொடக்க வீரராக களமிறங்கிய கே எல் ராகுல் தனியாக போராடி ரன் சேர்த்தார். ரோஹித் விக்கெட்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா மற்றும் ராகுல் இணை ரன் சேர்த்தது தற்போது ராகுல் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா அரைசதம் விளாசி களத்தில் நிதிஷ் உடன் விளையாடி வருகிறார். மழை காரணமாக போட்டி தடைபட்டுள்ளது.