cricket: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுத்து வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.
இதற்கு முன் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தொடரில் 6 இன்னிங்சில் களமிறங்கிய ரோஹித் சர்மா 92 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அந்த நியூசிலாந்து தொடரின் படுதோல்விக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் கம்பீர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்கள்.
அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா அணியில் இணைந்தார். மேலும் தொடர்ந்து அவர் இதுவரை விளையாடி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைசி 13 போட்டிகளில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.
மீதம் உள்ள போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் நீங்கள் பேசாமல் ஓய்வு பெறுங்கள் என்றும் கேப்டன் பதவி இல்லையென்றால் அவர் அணியில் இருக்க வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்.