ஒரு போட்டியில் இத்தனை முறை தடையா..இந்தியா vs ஆஸ்திரேலியா!! நிதானம் காத்த ராகுல் ஜடேஜா!!

0
111
India vs Australia
India vs Australia

cricket: இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் 9 முறை குறிக்கிட்டு நிறுத்திய மழை.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியானது நான்காவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது. மேலும் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இதனால் இந்த மூன்றாவது போட்டியின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது.

இந்த மூன்றாவது போட்டி 14 ம் தேதி தொடங்கியதில் இருந்து இதுவரை 9 முறை குறுக்கிட்டு போட்டி தடைபட்டுள்ளது. முதல் நாள் போட்டியில் 13 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்டது. இரண்டாவது நாளில் தொடங்கி ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி மூன்றாவது நாளில் 54 ரன்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதில் தொடக்க வீரர் மட்டும் விட்டுகொடுக்காமல் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் ஜடேஜா களமிறங்கினார் இவர்களின் இணை அணிக்கு வெகுவாக ரன் செர்த்தது . கே எல் ராகுல் 84 ரன்களும் ஜடேஜா 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் தீப் மற்றும் பும்ரா பேட்டிங் செய்து இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்துள்ளது.

Previous articleவெல்டிங் வைத்த போது வெடிவிபத்தில் சிதறிய உடல்கள்!! கிருஷ்ணகிரி அருகே கொடூரம்!!
Next articleமீண்டும் கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்!! தேனி கஞ்சா வழக்கில்!!