ADMK: இரட்டை இலை சின்னம் வழங்குவது குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் குறித்து காரசார விவாதம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வத்தை அடிப்படை பதியிலிருந்து நீக்கம் செய்தது முதல் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணி உபயோகித்துக் கொள்ளும் படி கூறினாலும், அதன் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலேயே உள்ளது.
இவ்வாறு இருக்கும் பொழுது இந்த அதிகாரத்தை எப்படி தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வழங்கலாம் என கட்சியிலிருந்து நீங்கிய புகழேந்தி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார். ஆனால் அதனை தேர்தல் ஆணையம் கண்டுக் கொள்ளாத நிலையில் வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீதே தற்பொழுது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் மீதே வழக்கு தொடுத்துள்ளதால், அதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் இவரிடம் விசாரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்தனர். ஆனால் புகழேந்தி சார்பாக வாதாடிய வழக்கறிஞர், டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டதுக்கு பிறகு தான் தேர்தல் ஆணையம் இந்த அழைப்பை விடுத்துள்ளனர் என தெரிவித்ததோடு, நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கை முடிக்க காலக்கெடு கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.
மேற்கொண்டு நீதிபதி, தேர்தல் ஆணையத்திடம் விரைந்து இது சம்மந்தமான வழக்குகளை முடிக்கும் படி கூறியதோடு, காலக்கெடு விதிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.