கண் கருவளையத்தை நிரந்தரமாக மறைய வைக்கும் அற்புத ஹோம் ரெமிடி இதோ!!

0
59

இன்று பலரும் சந்திக்கும் அழகு சார்ந்த பிரச்சனைகளை ஒன்று கருவளையம்.முன்பெல்லாம் 35,40 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே கருவளையம் ஏற்படும்.ஆனால் தற்பொழுது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கூட கண்களை சுற்றி கருவளையம் தென்படுகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய உதவும் ஹோம் ரெமிடி கீழே தரப்பட்டுள்ளது.

 

தேவையான பொருட்கள்:

 

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

2)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

3)வைட்டமின் ஈ கேப்சுயூல் – ஒன்று

4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

5)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

ஒரு சிறிய கிண்ணம் எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.

 

அடுத்து ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை மட்டும் பிரித்து தேங்காய் எண்ணையில் கலந்து கொள்ளுங்கள்.

 

பிறகு ஒரு வைட்டமின் ஈ கேப்சுயூலை அதில் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.அடுத்ததாக எலுமிச்சம் பழம் ஒன்றை இரண்டாக நறுக்கி அதன் சாறை தேங்காய் எண்ணெய் வைத்துள்ள கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

 

பிறகு ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சளை அதில் போட்டு நன்றாக கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து 45 நிமிடங்களுக்கு உலரவிடுங்கள்.

 

பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு கண்களை கழுவுங்கள்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண் கருவளையம் நீங்கும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)மஞ்சள் – ஒரு தேக்கரண்டி

2)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

ஒரு கிண்ணத்தில் பசு வெண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கண்களை கழுவவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1)வாழைப்பழத் தோல் – ஒன்று

2)தேன் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

ஒரு வாழைப்பழத் தோலை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு அரைக்கவும்.தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.பிறகு இந்த வாழைப்பழ பேஸ்டை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கண்களை சுற்றி அப்ளை செய்தால் கருவளையம் மறைந்துவிடும்.

Previous articleதிடீரென்று சர்க்கரை லெவல் உச்சம் தொட்டுவிட்டதா? டோன்ட் பீல்.. இதை சட்டுன்னு குறைக்கும் இயற்கை வழி இதோ!!
Next articleபெருங்குடலில் குவிந்து கிடக்கும் மலங்கள் வழுக்கி கொண்டு வெளியேற இந்த ஜூஸ் குடிங்க!!