ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் உலர் பழங்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும்.
உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உலர் விதை பால் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
1)முந்திரி பருப்பு – 10
2)கருப்பு உலர் திராட்சை – 10
3)வால்நட் – 5
4)பிஸ்தா பருப்பு – 10
5)பாதாம் பருப்பு – 10
6)பசும் பால் – ஒரு கப்
7)தேன் – ஒரு தேக்கரண்டி
8)பேரிச்சம் பழம் – இரண்டு
தயாரிக்கும் முறை:
அடுப்பில் வாணலி வைத்து 10 முந்திரி,10 பாதாம்,10 பிஸ்தா மற்றும் 10 வால்நட் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி 10 கருப்பு உலர் திராட்சை மற்றும் இரண்டு பேரிச்சம் பழத்தை போட்டு 15 நிமிடங்களுக்கு நன்கு ஊறவைக்க வேண்டும்.
இப்பொழுது வறுத்த முந்திரி,பாதாம்,பிஸ்தா மற்றும் வால்நட்டை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பசும் பால் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை பாலில் கலந்து கொதிக்கவிடவும்.
அடுத்து ஊறவைத்துள்ள பேரிச்சம் பழம் மற்றும் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து பருகி வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
1)வேர்க்கடலை – இரண்டு தேக்கரண்டி
2)பால் – ஒரு கிளாஸ்
3)ஏலக்காய் – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:
அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றவும்.
பிறகு அரைத்த வேர்க்கடலை பொடி மற்றும் ஒரு ஏலக்காயை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடலில் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
1)கொப்பரை தேங்காய் – கால் கப்
2)முந்திரி பருப்பு – 10
தயாரிக்கும் முறை:
முதலில் கொப்பரை தேங்காய் துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.இதனுடன் முந்திரி பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.பிறகு இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி பருகி வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.