cricket: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் போட்டியின் இடையில் தனது ஓய்வை அறிவித்தார் அஸ்வின்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 5 போட்டியில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கியது. இதில் இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டி சமனில் முடிந்தது.
இந்த தொடரில் நடந்த அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் விளையாடினார். நடந்து முடிந்த மூன்றாவது போட்டிக்கு பின் பேசிய அவர் தான் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விடை பெறுவதாக அறிவித்தார்.
தான் விளையாடிய அடிலெய்டு மைதானத்தில் நடந்த பிங்க் பால் டெஸ்ட் போட்டிதான் தனது கடைசி போட்டி என அதிகாரப்பூர்வமாக அவர் தனது ஓய்வை அறிவித்தார். இவர் இதற்கு முன் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பெரிதாக விளையாடாத பட்சத்தில் டெஸ்ட் போட்டிகளில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
மேலும் இந்த ஆஸ்திரேலியா தொடரில் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களின் மனதை உருக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.