பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் உணவுகள் விருப்பமானவையாக உள்ளது.கிராம புறங்களில் மீனை காயவைத்து கருவாடாக பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது.உப்பு தூவி நன்றாக காயவைத்த மீனில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
அதேபோல் கருவாட்டில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இந்த கருவாட்டை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் பலமடையும்.உடலில் உள்ள உறுப்புக்கள் பலமடைய கருவாட்டை சமைத்து சாப்பிட்டு வரலாம்.
அனீமியா தொந்தரவு இருப்பவர்களுக்கு கருவாடு சிறந்த தீர்வாக திகழ்கிறது.கருவாட்டில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் இதை உட்கொள்ளும் பொழுது எலும்பு சார்ந்த பிரச்சனைகள் சரியாகிறது.
பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கருவாடு சாப்பிடலாம்.கருவாட்டை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பித்தம் மற்றும் வாதத்தை குறைக்கும் ஆற்றல் கருவாட்டிற்கு உள்ளது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக கருவாடு சாப்பிடலாம்.
கருவாட்டில் மாசி கருவாடு அதிக சத்து நிறைந்தவையாக திகழ்கிறது.இந்த மாசி கருவாட்டில் முட்கள் இருக்காது.சூரை மீனில் இருந்து மாசி கருவாடு தயாரிக்கப்படுகிறது.இந்த கருவாட்டை உணவாக எடுத்துக் கொண்டால் சினைப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
நோய் பாதிப்பால் உடல் சோர்வடைந்தவர்கள் மாசி கருவாட்டை சமைத்து சாப்பிட்டு இழந்த பலத்தை மீட்டெடுக்கலாம்.ஆண்கள் மாசி கருவாட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்து திரவ உற்பத்தி அதிகமாகும்.
இந்த கருவாடு இரத்த ஓட்டத்தை சீரக வைக்க உதவுகிறது.கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள் அடிக்கடி மாசி கருவாடு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.கல்லீரல் தொடர்பான பாதிப்புகளை குணமாக்க மாசி கருவாடு உதவுகிறது.எலும்பு வலி,எலும்பு தேய்மானப் பிரச்சனை உள்ளவர்கள் மாசி கருவாட்டை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.