இக்காலத்தில் ஆண்கள் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனையாக ஆண்மை குறைபாடு உள்ளது.இதனால் உடலுறவில் நாட்டமின்மை,குறைவான விந்து வெளியேறுதல்,நீர்த்த விந்து போன்ற பல பாதிப்புகளை அவர்கள் சந்திக்கின்றனர்.
சிலருக்கு உடலுறவிற்கு பிறகு அதிக சோர்வு ஏற்படக் கூடும்.இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீரவு இங்கு தரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
1)பெரு சுரைக்காய் விதை – 10
2)நெய் – 1/2 தேக்கரண்டி
3)கருப்பட்டி – சிறிதளவு
செய்முறை விளக்கம்:
அடுப்பில் வாணலி வைத்து அரை தேக்கரண்டி பசு நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு 10 பெரு சுரைக்காய் விதையை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு இந்த சுரைக்காய் விதைகளை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அதன் பிறகு சிறிதளவு கருப்பட்டியை சுரைக்காய் தூளில் கலந்து சாப்பிட்டு வந்தால் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.இதனால் சலிப்பின்றி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்:
1)திப்பிலி பொடி – அரை தேக்கரண்டி
2)நெய் – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
திப்பிலி பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கி 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
திப்பிலி பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டால் பாலியல் உணர்வு அதிகமாகும்.
தேவையான பொருட்கள்:
1)முருங்கை விதை – 20 கிராம்
2)பூனைக்காலி விதை – 20 கிராம்
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:
முதலில் முருங்கை விதை மற்றும் பூனைக்காலி விதையை வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்கி முருங்கை விதை மற்றும் பூனைக்காலி விதையை போட்டு லேசாக வறுக்கவும்.
பிறகு இதை ஆறவிட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.